Wednesday, March 28, 2012

லட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்


மதுரை சமயநல்லூரில் தியாகி  பகத்சிங்கின் 81 வது  நினைவு தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்( CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM )  சார்பாக 23.03 .2012 அன்று  நினைவு ஸ்தூபி எழுப்பட்டு CWP  தோழர்கள் மற்றும் அந்த பகுதி வாழும் மக்களால் வீர வணக்கம் செலுத்தப்பட்டது . 25 .03 .2012 அன்று பொது கூட்டமும் நடடத்தப்பட்டது.  மாணவர் ஜனநாயக இயக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் தோழர். டேவிட் வினோத் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுகூட்டத்தில் CWP,சமயநல்லூர் கிளை பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் வரவேற்புரை வழங்கினார். மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் .வரதராஜ் , சமயநல்லூர் மகாதேவன் ,விருதுநகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஜெகநாதன் , சிவகாசி பட்டாசு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர்.தங்கராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.



 கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்(CWP ), தென் இந்தியாவிற்கான  பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் நீண்டதொரு சிறப்புரை வழங்கினார். கூட்டத்தில் பேசிய அனைத்து தோழர்களும் மிகுந்த உற்சாகத்தோடு தியாகி பகத்சிங்கின் ஒப்பற்ற தியாக வரலாற்றையும் , அவர் விட்டுச்சென்ற பணியை செய்ய வேண்டிய கம்யூனிஸ்ட் அமைப்புகள் இன்று அப்பட்டமாக முதலாளித்துவ சேவையை செய்வதையும் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் பகத்சிங்கின் காலடி தடத்தை வழுவாமல் பின்பற்றி எவ்வாறு ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்ந்து வருகிறது என்பதையும், நாம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை என்ன என்பதையும் விரிவாக பேசினார்கள். 

100 மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த பொது கூட்டம் சமயநல்லூர் வாழ் மக்களிடையே ஒரு லட்சியத்தீயை பற்ற வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. 

No comments:

Post a Comment