Friday, March 2, 2012

சிறப்புடன் நடைபெற்ற மதுரை கருத்தரங்கம்



சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), அமைப்பு ,26 .02 .2012  ( ஞாயிறு ) அன்று . மாலை 6 மணி முதல் 9.30  மணி வரை  மதுரை, மணியம்மை  மழலையர் & தொடக்கப்பள்ளியில் , "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை சிறப்புடன் நடத்தியது , சி.ஓ.ஐ.டி.யு. யின் பொறுப்பாளர்  தோழர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் சர்வதேச கீதத்தோடு துவங்கியது .  உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில  அமைப்பாளர் தோழர் வரதராஜ் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் சுந்தர் , ஏ .ஐ.டி.யு.சி யை சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் , அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தோழர் சம்பத் , மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் தோழர் பாலமுருகன் , பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற் சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார் , அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர் பாரதி, மாற்றுக்கருத்து ஆசிரியரும், கேளாத செவிகள் கேட்கட்டும்- பகத்சிங் புத்தகத்தின் ஆசிரியருமான தோழர் த.சிவகுமார் , ஆகியோர் தொழிற் சங்கங்களின் இன்றைய நிலையினை விரிவாக எடுத்துரைத்தனர். 


இறுதியாக இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும்  எழுச்சியூட்டும் விதமாக சிறப்புரையை சி.டபிள்யு.பி.யின் தென் இந்தியப் பொது செயலாளர், தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment