Friday, March 25, 2011

மார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

தியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வி­யத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.

Saturday, March 12, 2011

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு



கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.