தியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வியத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.
இந்தியாவில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன அவற்றில் இந்தியாவை பற்றி சரியான புரிதலுடனும் , உலக அரசியல் நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டும் உள்ள சோஷலிச அரசை இந்தியாவில் நிர்மாணிக்க போராடி வரும் தோழர் சங்கர் சிங் தலைமையில் இயங்கி வரும் அமைப்பு
Showing posts with label cwp. Show all posts
Showing posts with label cwp. Show all posts
Friday, March 25, 2011
Wednesday, January 12, 2011
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பு துவக்க கன்வென்சன்

நண்பர்களே!
உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி; உயர்மட்டத்திலுள்ள ஆளும் வட்டாரங்கள் சொல்வதற்கும் அவர்களின் வாக்குறுதிகளும் மாறாக கிராமப்புறங்கலும் நகர்புறங்களிலும் தொடர்ச்சியாகப் பெருகிவரும் வேலையின்மை; அதிகாரவர்க்கம் , நிர்வாகதுறை, நீதித்துறை என அனைத்துத் துறைகளின் அனைத்து மட்டங்களிலும் முழுவீச்சில் ஊடுருவிப் பரவி யிருக்கும் ஊழல்; சாதரண மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு அதிகச்செலவு மிக்கதாய் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போன கல்வியும், மருத்துவமும்; சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்லரித்துப்போன கலச்சாரக்கட்டமைப்பும் சீரழிந்து ஒழுக்கமும் நேரமையற்ற போக்குகளும் இவையே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் அவலமான சித்திரம். இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பாகச்செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நாடளுமன்றம் உட்பட பல்வேறு மட்டங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளோ அப்பங்கினை ஆற்றத் தவறி நீண்ட காலமாகி விட்டது. அவை அனைத்தும் தங்களின் சுயலாபத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் பொதுபணத்தைச் சூறையாடும் கொள்ளைக்காரர்களின் அமைப்புகளாக மாறிவிட்டன.
Subscribe to:
Posts (Atom)