Friday, January 21, 2011

தகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வோம் (CWP)



சமுக முன்னேற்றத்தில் கருத்துக்கள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அனைத்தையுமே அனுபவம் மூலம் அறிந்தே ஒரு மனிதன் தேவைப்படும் விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போக்கினை கருத்துகள் மாற்றின. அத்தகைய கருத்துக்கள் மூலமே மாபெரும் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்களின் உதயமே சமூகத்தின் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

Wednesday, January 12, 2011

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பு துவக்க கன்வென்சன்



நண்பர்களே!
உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி; உயர்மட்டத்திலுள்ள ஆளும் வட்டாரங்கள் சொல்வதற்கும் அவர்களின் வாக்குறுதிகளும் மாறாக கிராமப்புறங்கலும் நகர்புறங்களிலும் தொடர்ச்சியாகப் பெருகிவரும் வேலையின்மை; அதிகாரவர்க்கம் , நிர்வாகதுறை, நீதித்துறை என அனைத்துத் துறைகளின் அனைத்து மட்டங்களிலும் முழுவீச்சில் ஊடுருவிப் பரவி யிருக்கும் ஊழல்; சாதரண மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு அதிகச்செலவு மிக்கதாய் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போன கல்வியும், மருத்துவமும்; சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்லரித்துப்போன கலச்சாரக்கட்டமைப்பும் சீரழிந்து ஒழுக்கமும் நேரமையற்ற போக்குகளும் இவையே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் அவலமான சித்திரம். இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பாகச்செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நாடளுமன்றம் உட்பட பல்வேறு மட்டங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளோ அப்பங்கினை ஆற்றத் தவறி நீண்ட காலமாகி விட்டது. அவை அனைத்தும் தங்களின் சுயலாபத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் பொதுபணத்தைச் சூறையாடும் கொள்ளைக்காரர்களின் அமைப்புகளாக மாறிவிட்டன.

Saturday, January 8, 2011

மாற்றத்திற்கான ஆரம்பம் மதுரையில் - CWP யின் முதல் அமைப்பு மாநாட்டு பொதுக்கூட்டம்



மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் காவியத்தின் முதல் அத்தியாயம் தான் நம் கண் முன்னே காட்சியாக விரிகிறது. அந்த நாவலில் வரும் தாயின் வாழ்க்கையானது கிட்டத்தட்ட ஒரு நரகத்தின் வாசலை தான் நமக்கு காட்டும் அந்த அளவிற்கு தொழிலாளிகளின் இரத்தம் முதலாளிகளால் உறிஞ்சப்படும்.அதை போலதான் இன்றும் நம்முடிய வாழ்க்கை பேரவலமாக உள்ளது இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் அது உலகின் வல்லரசாக உருமாறி வருகிறது என்றும் அது தெற்காசியாவின் மிகப்பெரிய தாதா என்றும் அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா கூறுகிறார். நம்முடிய பாரதப் பிரதமர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்று அகிலமெல்லாம் போற்றப்படுகிறார். ஆனாலும் விண்ணைமுட்டும் அளவிற்கு 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பங்களா ஒருவருக்குமாகவும் வெறும் தார்ப்பாயை மட்டும் மேற்கூரையாக கொண்டு வாழக்கூடிய பலகோடி மக்கள் ஒருபுறமாகவும் இந்த இந்தியா இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது .